Friday, 5 October 2012

வழக்கு எண்' படத்தில் நடித்த சிறுவன் 6 வருடங்களுக்கு பின் மீட்பு: டி.வி.யில் படம் பார்த்து பெற்றோர் கண்டுபிடித்தனர்



'வழக்கு எண்' படத்தில் நடித்த சிறுவன் 6 வருடங்களுக்கு பின் மீட்பு: டி.வி.யில் படம் பார்த்து பெற்றோர் கண்டுபிடித்தனர்






வழக்கு எண் 18/9' படத்தில் நடித்த அன்பு என்ற 12 வயது சிறுவனை 6 வருடங்களுக்கு பின்பு பெற்றோர் மீட்டுள்ளனர். அன்பு 6 வயதில் காணாமல் போனான். சென்னை தெருக்களில் அழுதபடி சுற்றி திரிந்த அவனை மனநலம் குன்றிய இல்ல நிர்வாகிகள் தூக்கி வந்து காப்பகத்தில் சேர்த்தனர்.

2006 முதல் எழும்பூரில் உள்ள அரசு பாலவிகார் இல்லத்தில் வளர்ந்து வந்தான். மனநலம் குன்றிய அச்சிறுவனை இயக்குனர் பாலாஜி சக்திவேல் 'வழக்கு எண் 18/9' படத்தில் நடிக்க வைத்தார்.

கதாநாயகியின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் சிறுவனாக நடித்தான். இப்படம் வினாயகர் சதுர்த்தியன்று டி.வி.யில் ஒளிபரப்பானது. திருப்பூரில் வசிக்கும் மில் தொழிலாளி லோகநாதனும் அவரது மனைவியும் படத்தை பார்த்தனர்.

அதில் நடித்துள்ள சிறுவன் அன்பு தங்கள் மகன் என்று அடையாளம் கண்டனர். உடனடியாக சென்னை புறப்பட்டு வந்து பாலாஜி சக்திவேலை சந்தித்தார்கள். அன்பு சிறுவயதில் காணாமல் போன தங்கள் மகன் என கூறினார்.

அவர்களை பாலாஜி சக்திவேல் குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்து சென்றார். அங்கு பிறப்பு சான்றிதழ் போன்ற ஆதராங்களை காட்டி சிறுவன் அன்புவை மீட்டு அழைத்து சென்றார்கள்.

இதுகுறித்து பாலாஜி சக்திவேல் கூறும்போது சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்ததன் மூலம் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்கார் விருது பெற்றது போன்ற ஆனந்தத்தில் திளைத்தேன் என்றார்.

Thursday, 4 October 2012

Vazhakku Enn 18/9 - Tamil movie restores lost son to family


Tamil movie restores lost son to family

Thirrupathi Brothers film media pvt - 

Director N. Lingusamy  Produce movie Vazhakku Enn 18/9 

Thursday, 20 September 2012

Remake - Case No.18/9 in Kannada



http://www.indiaglitz.com/channels/kannada/article/86287.html

Case No.18/9 in Kannada

IndiaGlitz [Thursday, September 20, 2012]

'Case No.18/9' a remake of Tamil film 'Vazhakku Enn 18/9' - a film on teenage crime of Balaji Shakthivenu with new artists took four years for release is appearing in Kannada from the direction of Mahesh Rao. This May 2012 Tamil release in Kannada stars Niranjan Shetty and Sindhu Lokanath in the lead role. The Tamil version was dubbed to Telugu as 'Premalo Padithe' and Malayalam film is titled as 'Black Butterflies'.

Niranjan appeared in 'Jolly Days' and he was in the cloud of controversy on the subject of 'Katari Veera Sura Sundarangi' Kannada cinema. Sindhu Lokanath making debut from 'Lifu Ishtene' is in quite a few films and the recent one is 'Drama' in that she plays a dumb heroine in Yogaraj Bhat direction.

It is a joint venture production Pravin Shetty, Shivanand Shetty, VK Mohan and Kanthi Shetty. Sabha Kumar of 'Psycho' is the cameraman and Arjun Janya is tuning the music. In Bangalore and New Delhi the shooting will be will be held says Mahesh Rao.

Friday, 24 August 2012

Tamilcinema -123 -திரை விமர்சனம்





வழக்கு எண் 18/9 – திரை விமர்சனம்



சாலையோர சாப்பாட்டு கடையில் வேலை செய்யும் அனாதையான ஹீரோ வேலு, அவனது கடைக்கு பக்கத்து அபார்ட்மெண்டில் வேலை செய்யும் ஜோதியை ஒருதலையாக காதலிக்கிறான்.

அந்த அபார்ட்மெண்டில் தங்கியிருக்கும் வேலைக்கு செல்லும் அப்பா, அம்மா. அவர்களது ஒரே மகள் ஆர்த்தி. அதே அபார்ட்மெண்டில் குடியிருக்கும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த மாணவன் தினேஷ், ஆர்த்தியின் அழகில் மயங்கி, அவளுக்கு காதல் வலை விரிக்கிறான். இவன் பெண்களை செல்போனில் ஆபாசமாக படமெடுத்து ரசிக்கும் வக்கிரபுத்தி கொண்டவன். இது தெரியாமல் தினேஷ் விரித்த வலையில் சிக்குகிறாள் ஆர்த்தி.
தினேஷ் அவளையும் ஆபாசமாக படம் பிடித்து நண்பர்களுக்கு போட்டுக் காண்பித்து ஆனந்தமடைகிறான். ஒரு கட்டத்தில் எதிர்பாராதவிதமாக அவனுடைய செல்போனை பார்க்க நேர்ந்த ஆர்த்தி, அதில் தன்னுடைய ஆபாச படம் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறாள். இதனால் அவனது செல்போனின் மெமரி கார்டை எடுத்து வந்து, அதை வைத்து அவனை போலீசில் சிக்க வைக்க முயற்சி செய்கிறாள்.
இதை அறிந்த தினேஷ் ஆத்திரமடைகிறான். தான் மாட்டிக் கொள்வோமா என்ற பயத்தில் அவள் முகத்தில் ஆசிட் வீச எண்ணுகிறான். ஆர்த்தி என நினைத்து ஜோதி மீது ஆசிட் வீசிவிட்டு ஓடி விடுகிறான்.
ஜோதிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் தினேஷ்தான் குற்றவாளி என தெரிந்திருந்தும், அவனது அம்மா அரசியல் செல்வாக்கு பெற்றவர் என்பதால் அவரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, விசாரணைக்கு அழைத்து வந்த ஹீரோ வேலுவை குற்றவாளியாக்க முயல்கிறார். ‘பணத்தை வாங்கிக் கொண்டு குற்றத்தை ஒப்புக்கொள்’ என வேலுவை மிரட்டுகிறார்.
இறுதியில், தான் ஒருதலையாக காதலிக்கும் ஜோதியின் சிகிச்சைக்காக பணத்தை பெற்றுக்கொண்டு, குற்றத்தை ஒப்புக்கொள்வதாக கூறிவிட்டு, வேலு சிறைக்கு செல்கிறான். ஆனால் வேலுவின் கடையில் வேலை செய்த சிறுவன் மூலம் பணம் இன்னும் அவளுக்கு செல்லவில்லை என்றும் அதனால் அவளுக்கு சிகிச்சை நடக்கவில்லை என்பதை அறிந்தும் வருந்துகிறான்.
இறுதியில் வேலுவின் காதல் என்ன ஆனது? குற்றம் செய்த தினேஷ் தண்டிக்கப்பட்டாரா? துரோகம் செய்த இன்ஸ்பெக்டர் என்ன ஆனார்? என்பதே க்ளைமாக்ஸ்.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக் களத்தை ஏற்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். திண்டுக்கல்லில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த ‘காதல்’ படத்தையடுத்து, மீண்டும் ஒரு உண்மை சம்பவத்தை படமாக்கியிருக்கிறார்.
படம் பார்த்துவிட்டு வெளிவரும் ஒவ்வொருவரின் கண்களிலும் கண்ணீரை பார்க்க முடிகிறது. அந்தளவிற்கு மனதை உருக்கும் காட்சியமைப்புகளை உருவாக்கியுள்ளார் இயக்குனர்.
வேலுவாக வரும் ஸ்ரீ, பிளாட்பார பையனாகவே வாழ்ந்திருக்கிறார். இன்ஸ்பெக்டரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று கூறும் இடத்தில் அவர்மேல் பரிதாபப்பட வைக்கிறது.
வேலைக்காரப் பெண் ஜோதியாக வரும் ஊர்மிளா மஹந்தா தனது கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இவருக்கு படத்தில் வசனங்கள் அதிகமாக இல்லை. ஆனால், கண்களாலே நிறைய வசனங்கள் பேசியிருக்கிறார்.
தினேஷாக வரும் மிதுன் முரளி பளபள என்று பணக்காரத்தனத்துடன் ஒன்றியிருக்கிறார். இவரது வக்கிர நடிப்பு கதாபாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
ஆர்த்தி கதாபாத்திரத்தில் வரும் அழகான ராட்சசியாக மனீஷா யாதவ். இவர் தினேஷிடமிருந்து மெமரி கார்டை எடுக்க இருக்கும் காட்சியில் நம்மையும் சேர்த்து பயம் கொள்ள வைக்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் முத்துராமனின் நடிப்பும், வசன உச்சரிப்பும் யதார்த்தம். இப்போதிருக்கும் சில மோசமான இன்ஸ்பெக்டர்களை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.
படத்தின் முற்பாதி ஆங்காங்கே தொய்வைக் கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதை மூலம் நம்மை படத்தோடு ஒன்றவைத்து விடுகிறார் பாலாஜி சக்திவேல்.
விஜய் மில்டனின் புதுமையான தொழில்நுட்பத்துடன் கூடிய ஒளிப்பதிவும், பிரசன்னாவின் உயிரோட்டமான பின்னணி இசையும், கோபி கிருஷ்ணாவின் நேர்த்தியான படத்தொகுப்பும் ஒரு பரபரப்பான வழக்கை கண் முன்னே பார்த்த திருப்தியைத் தருகிறது.
இன்றைய இளைய தலைமுறையினர் செல்போனின் நவீன தொழில்நுட்பத்தால் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை, இப்படத்தின் மூலம் சமூகத்திற்கு எச்சரிக்கை மணி அடித்திருக்கும் பாலாஜி சக்திவேலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
மொத்தத்தில் வழக்கு எண் 18/9 ரசிகர்களைக் கவரும் வழக்காகும்.

Saturday, 14 July 2012

hellotamilcinema.com




வழக்கு எண் 18/9 : ஓரடி முன்னே... ஈரடி பின்னே...

valzakku-en18-review2
  • PREV
  • 1 of 2
  • NEXT
சென்னையில் சிறப்புக்காட்சி பார்த்தவுடன் நண்பர்கள் சிலர் புகழ்ந்த வேகத்தில் படத்தைப் பார்த்தே ஆகவேண்டுமென்று தோன்றியது. பற்றாக்குறைக்கு, ‘என் நாற்பது ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் நான் பார்த்த சிறந்த படம் இதுதான்’ என்று பாரதிராஜாவும், பாலுமகேந்திரா ஒருபடி மேலே போய், ’நான் மாரடைப்பிலிருந்து தப்பி உயிர் பிழைத்ததே இப்படத்தைப் பார்க்கத்தான் என்று
நினைக்கிறேன்’ என்றெல்லாம் பேசியதாகக் கேள்விப்பட்ட போது எனது ஆர்வம் உச்சகட்டத்தை அடைந்தது.
சமீபத்தில் பார்க்கக் கிடைக்கிற உலகப்படங்கள் நம் இயக்குநர்களை தொந்தரவு செய்யத் தொடங்கியிருப்பதற்கான வெளிச்சக் கீற்றுகள் தமிழ் சினிமாவில் தெரியத் தொடங்கியிருக்கின்றன. குறிப்பாக கதை சொல்வதில் இயக்குநர்கள் மாற்றங்களைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அலைபாயுதேயில் மணிரத்னம், இன்று காலை 8மணி.. என்றெல்லாம் அலைபாய்ந்தார். உடனே பலரும் அதைப் பிடித்துக்கொண்டு தொங்கத் தொடங்கினார்கள். ஆனால் அதை அர்த்தப்பூர்வமாக யாரும் பயன்படுத்தவில்லை. முதன் முறையாக தமிழில் பாலாஜி சக்திவேல் கதைக்குத் தேவையான அல்லது இந்தக் கதைக்குப் பொருந்தக்கூடிய ஒரு கதைகூறலைப் பரிசோதித்திருக்கிறார். ஆனால் கதையைப் புத்திசாலித்தனமாகக் கூறிவிடுவது மட்டும் சினிமாவாகி விடுவதில்லையே?
உடனே உங்கள் மனக்குரல் (அதாங்க மைண்ட் வாய்ஸ்) ’இந்த விமர்சகர்கள் தொல்லை தாங்க முடியலப்பா! உருப்படியா படம் எடுக்க முயற்சிக்கிறதே சொற்பம். அவங்களையும் நொட்டை சொல்லியே ஓச்சுருவாங்க’ என்று சொல்வது கேட்காமல் இல்லை. ஆனால் இது குறை சொல்வதற்காகவே காத்திருப்பது அல்ல.  வழக்கமாக ஒரு எதிர்பார்ப்புள்ள படம் படுத்துவிட்டால், திரையுலகிற்குள் சக சினிமாக்காரர்கள் பலர் நிம்மதிப் பெருமூச்சு விடுவர், அதற்காகவே காத்திருந்தது போல்.
அதற்குப் பொறாமை தவிர வேறு காரணம் இருக்க முடியாது. ஆனால் சினிமாவிற்கு வெளியே என்னைப் போல் பலர், தமிழ் சினிமாவில் ஏதாவது பாய்ச்சல் நிகழ்ந்துவிடாதா? என்ற பதைப்பில் புதிய முயற்சிகளை எதிர் நோக்கியபடியே காத்திருக்கிறோம் என்பதால் தான் இத்தகைய கடுமையான அணுகுமுறை. இந்தப்படம் உண்மையிலேயே மிகவும் எதிர்பார்க்கப்பட்டதற்குக் காரணங்கள் சில உண்டு..
காதல் என்கிற மிக முக்கியமான படத்தை, கல்லூரி என்கிற எளிமையான சினிமாவை முயற்சித்த இயக்குநரின் அடுத்தபடம்...
இரண்டு வருடங்களாக எடுத்துக் கொண்டிருக்கிறார்...
மிக முக்கியமாக, புதிய டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முழுக்க எடுக்கப்படுகிற படம்.. அதிலும் பிரபலமான ஒளிப்பதிவாளர். இந்தப்படம் வெற்றி பெற்றால், டிஜிட்டல் தொழில்நுட்பம் பரவலாகும். குறைந்த மூலதனத்தில் புதிய இயக்குநர்கள் புதிய கதைகளோடு களமிறங்குவார்கள். ஒரு புதிய டிஜிட்டல் சகாப்தம் உருவாகக் கூடும் என்ற எதிர்பார்ப்புகளெல்லாம் மேலோங்கி இருந்தது. ஏனென்றால் டிஜிட்டல் தொழில் நுட்பம் பற்றி தமிழ்ச் சினிமா உலகில் குழப்பமான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
’என்னதான் தலை கீழாய் நின்றாலும் பிலிம்மில் படம் எடுப்பதற்கு இணை எதுவுமில்லை’...
’எடுக்கத் தெரிந்தவர்கள்தான் அதை வைத்து எடுக்க முடியும். நம் ஒளிப்பதிவாளர்களுக்கு இதைக் கையாளத் தெரியவில்லை என்பதுதான் பிரச்சனை’ என்று எதிரும் புதிருமாகப் பேசிவருகிறார்கள். பி.சி.ஸ்ரீராம் முழுதாக ஒரு படம் முயற்சித்தார். கமல்ஹாசன் ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ என்று எடுத்துப்பார்த்தார். சேரன் அவர் படத்தின் சில பகுதிகளை முயற்சித்துப் பார்த்தார். எதுவும் கைகூடாத நிலையில் இப்போது விஜய்மில்டன் ‘வழக்கு எண்ணில்’.
ஒளிப்பதிவில் இரண்டு பிரச்சனைகள் தென்பட்டன. ஒன்று படத்தின் தெளிவின்மை. புரொஜெக்சன் சரியில்லையோ என்று எண்ணும்படி.
எப்படியும் அது தொழில் நுட்பத்தின் கோளாறாகத்தான் இருக்கமுடியும். குறிப்பாக ஒளியமைப்பு. காட்சிகள் மிகவும் தட்டையாகத்(flat) தோன்றியதற்கு இதுதான் காரணமாக இருக்க வேண்டும்.  ஒளியமைப்புதான் திரையின் இரு பரிமாண வெளியில் முப்பரிமாணமான போலித் தோற்றத்தை உருவாக்குகிறது.
வழக்கு எண்ணிலோ வீடியோத் தன்மை அப்படியே தென்படுகிறது.  இரண்டாவது, யதார்த்தம் என்ற பெயரில் ’ப்ரேம்கள்’ பல இடங்களில்  மிகவும் தளர்வாகவும், சில இடங்களில் மிக நெரிசலாகவும் ஏனோ தானோவென்று தென்பட்டன. நாங்கள் வேண்டுமென்றேதான் அப்படி அமைத்தோம் என்றும் சொல்லலாம். ஆனால் யதார்த்தத்தில் ‘சினிமா யதார்த்தம்’ என்று ஒன்று உண்டு. அதாவது  சினிமாவில் என்ன செய்தாலும் ஒரு இயக்குநர் ‘யதார்த்தம் போன்ற’ ஒன்றைத்தான் முயற்சிக்கிறாரே தவிர புற உலகின் யதார்த்தத்தை அப்படியே பெயர்த்து வைத்துவிட முடிவதில்லை. நிஜக் கண்கள் பார்க்க இயலும் பெரும் பரப்பில் சினிமாவிற்கான ‘ப்ரேமை’  தேர்ந்தெடுக்கும்போதே, அங்கு ஒரு யதார்த்தம் ’செயற்கையாக’ கட்டமைக்கப்படுகிறதாகத்தான் அர்த்தமாகும். வழக்கு எண்ணில் காட்சிகள் ஒரு சினிமா அனுபவத்தைத் தரத் தவறிவிட்டன.
திரைக்கதையை ’அ–நேர்கோட்டு’ (non-linear ) பாணியில் சொல்வது போலவே, காமராவைக் கையாள்வதிலும் ஒரு ‘நான்–லீனியர்’ பாணி உண்டுதான். சிட்டி ஆஃப் காட் (City of God), பாட்டில் ஆஃப் அல்ஜீயர்ஸ் ( Battle of Algiers)  போன்ற படங்கள் அதன் உச்சத்தை தொட்டவை.   விஜய் மில்டன் கைக்குள் அடங்கும் கேமரா என்பதால் அபத்தமான கோணங்களில் சிலவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறார். குப்பை போடப் போனால் குப்பைத் தொட்டிக்குள்ளிருந்து கேமரா பார்ப்பது, பீரோவைத் திறந்தால் பீரோவுக்குள்ளிருந்து கேமரா பார்ப்பது என்பதாக இருந்ததை கண் இமைகளுக்குள்ளிருந்து கேமரா பார்ப்பதாக மில்டனின் கேமரா மெனக்கெட்டிருக்கிறது. இத்தகைய அபத்தமான கோணங்கள் பார்வையாளனின் சினிமா அனுபவத்தை எவ்வகையில் மேம்படுத்துகின்றன? அதுவும் ஒரு தீவிரமான கதையைச் சொல்ல முயற்சி செய்யும் சினிமாவில் இத்தகைய கேமரா கோணங்களும் அசைவுகளும் எவ்வளவு பாதகமாக முடியும் என்பதை ’வழக்கு எண்ணில்’ வெளிப்படையாகத் பார்க்க முடிந்தது.
இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் பிரசன்னா என்று அழைக்கப்படும் கிதார் பிரசன்னா. இதைக் கேள்விப்பட்டதிலிருந்தே எனக்கு படத்தைவிட இசையைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. அவருடைய இசை என்று தனியாக எதையும் கேட்டதில்லை என்றபோதும்,  உலகின் தலை சிறந்த கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்த்துபவர், கல்லூரி நாட்களிலிருந்து கிதாரை கர்நாடக இசைக்குப் பழக்கி பரிசோதனைகள் நிகழ்த்துபவர் என்ற வகையில் அவர் ஏதாவது செய்துவிடக்கூடும் என்று எதிர்பார்த்தேன்.
‘உன்னை யாருய்யா எதிர்பார்க்கச் சொன்னா?’ என்பதுபோல் இசை அமைந்திருந்தது. சினிமா இசை என்பதே பிடிபட்டதாகத் தெரியவில்லை. ‘வானத்தையே எட்டிப்பிடிப்பேன்..’ என்கிற நாலு வரிப்பாடல் தவிர சொல்லிக் கொள்ளும் படியாக எதுவும் நடந்துவிடவில்லை. அதுவும் அவருடையதா எனத் தெரியவில்லை. உலக சினிமாவில் பிண்ணனி இசை என்பது வெகுவாக மாறிவிட்டது என்பதை இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இன்னும் தீம் மீயூசிக் போட்டுக்கொண்டிருக்கிறார்கள் நம் இசை அமைப்பாளர்கள்.
குறிப்பாக எங்கு எவ்வளவு இசை வேண்டும் என்பதைச் சரியாகத் தீர்மானித்தாலே பாதிப் பிரச்சனைகள் தீர்ந்து விடும்.  பொதுவாகவே இசைக்கருவிகளில் விற்பன்னர்களாக இருப்பவர்கள், மிகச்சிறந்த இசையமைப்பாளர்களாக மிளிர்ந்ததாக எனக்கு நினைவில்லை, பண்டிட் ரவிசங்கர் உட்பட.
பதேர் பாஞ்சாலியில் அவரின் இசையை ஆஹா.. ஓஹோவென்று சிலாகிப்பவர்கள் உண்டு. ஆனால் அது ஏனென்று எனக்கு இன்றுவரை புரிவதில்லை. மேலும் மனதை மயக்கும் அவருடைய ஒரு இசைக் கோர்ப்பையும் நான் கேட்டதில்லை.
பொதுவாக செவ்வியல் இசையில், கருவியிசையில் மேதைகளாக விளங்குபவர்கள், ராக தாள கணக்கு வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில், திறந்த சன்னலின் வழியே  கேட்காமல் புகுந்து விடுகிற காற்றுப்போல, தன்னெழுச்சியாக தவழ்ந்து வரும் இசையைத் தவறவிடுபவர்களாகவே இருக்கிறார்கள். பிரசன்னாவுக்கு என்ன பிரச்சனையோ?
கதையும் மிக எளிதானதுதான். புதிய கதை என்று இருக்க வேண்டியதுமில்லை. ஒரு ஏழை, பாமரன் எல்லா இடங்களிலும் ஏமாற்றப்படுகிறான். வஞ்சிக்கப்படுகிறான். சீரழிந்த சமூக நிறுவனங்களின்  ஊடான அவன் பயணம் உணர்ச்சிகரமானது. ஆனால் அவனுக்கு அவ்வளவு பெரிய முன்கதை சொன்னவர் நாயகியை பற்றிச் சுருங்கச் சொல்லி நிறுத்திக் கொள்கிறார். அவனுடைய பழைய கதை படத்தின் மையத்தையும் தூக்கி நிறுத்த உதவவில்லை. மிக ஆரம்பத்திலேயே பலியாடாக மாறப்போகிறவன் இவன் தான் என்பதும் ஊகிக்கக் கூடியதாகி விடுகிறது. எதிர்பாரா அம்சம் அந்தப் பெண்ணின் எதிர்வினை மட்டுமே.
மொத்தத்தில் இப்போதும் பாலஜி சக்திவேலின் சிறந்த படமாக ‘காதல்’ தான் கண் முன் நிற்கிறது.
--இரா. பிரபாகர்.

Wednesday, 11 July 2012

indiaglitz - review Premalo Padithe



Premalo Padithe - Juxtaposing purity with depravity

IndiaGlitz  [Friday, May 04, 2012]
The strength of Premalo Padithe lies in the climax: Here suspense is neatly unravelled and a love story develops into an immortal affair.  This is a film where two underdogs are at the receiving end of circumstances.  The villains of the piece comprise of an alliance of police-politician-capitalist troika, at the other end of the spectrum are Venu (Sri) and Jyothi (Urmila Mahantha), two poverty-stricken youngsters.  Their lives are shattered by the actions of a lecherous Intermediate student, who doesn't know that they exist on earth.
Venu works for an idli-maker, eats and sleeps by the roadside.  There is Jyothi, who is a domestic servant in an upscale gated community household.  An orphan, Venu sees in Jyothi, a soft-spoken, shy girl, a mother.  He soon falls in love with her.
Even as he trembles at the thought of talking to her, there is an unsavoury story unfolding somewhere and the daughter of Jyothi's owner is at the centre of this story.  Aarthi (Manisha Yadav) has been befriended by Nitesh (Mithun Murali), a spoilt rich son.  After initial reluctance, Aarthi falls into Nitesh's trap and before she realizes, she has gone on an outing with him.  When she comes to know of his true colours, she tries hard to get rid of him.  But that is not to be easy.
Herein lies the crux of the story.  The climax is about how an action of Nitish triggers a set of incidents that are a hard-hitting commentary on the depravity and inhumanity in our society (remember the climax is a real-life incident) and that are a moving portrayal of sacrifice and eternal love.
Venu expresses a lot without uttering much.  The director manages to build a chemistry between the girl and the boy although they don't talk throughout.  In the end, the only sentence he says to her is, "Yennalu aina nee kosam nenu untanu".  In contrast with the pure and innocent world of Venu and Jyothi is that of Nitesh and Aarthi.  Aarthi is not floozy, but she is, like an ordinary middle-class girl, attracted to the charms of costly gadgets and expensive treats.  Nitesh represents the crooked mindset of uncultured youngsters.
Everything said, Premalo Padithe is not very entertaining, although it is aesthetic.  That its nativity is un-Telugu is to state the obvious.  Yes, the director does deal the story with honesty and conviction, but the film cannot be sustained by an exalting climax alone.
The four young actors do justice to their roles in their own way, with Sri emerging as the best one.  Urmila's innocent and homely look is a plus, while Manisha has the right body language to carry her role.  Mithun sounds every bit a soft villain.
Technically, the film's cinematography by Vijay Milton is good, while Prasanna's BG is convincing.  The title song featuring Suresh Kondeti is inappropriate (much like the title) and the makers would do well to remove it urgently.
The climax, for all its complexity and beauty, may not haunt you like the climax of Premisthe.  Watch the film without expectations and you may like it depending on your sensibilities.
Released on: 4th May, 2012