Velu who works in a roadside shop.He comes across Jyothi and falls in love.She works as servant maid in adjoining apartments. There lives in the apartment Aarthy meets dinesh a student too resides in the same apartment.Dinesh leads a wayward life and is obsessed to watch porn. As it happens, Aarthy falls for him without knowing his past and intentions. A series of happenings lead to a crime and the baton is passed on to inspector who investigates the crime.
Wikipedia - Balaji Sakthivel -Director
Sunday, 1 July 2012
Thursday, 28 June 2012
தினமலர் விமர்சனம் - வழக்கு எண் 18/9
cinema.dinamalar.com -Vazhakku enn 18/9 -
ஜோதியின் அம்மா உள்ளிட்டவர்களின் கூற்றுபடி ஆசிட் அடித்தது வேலு தான் என விசாரணை கைதியாக பிடித்து வரும் காவல்துறை, காசுக்கு ஆசைப்பட்டு தனது குள்ளநரித்தனத்தால் அவரையே குற்றவாளியாகவும் கோர்ட்டின் முன் நிறுத்துகிறது. இந்த வழக்கில் இருந்து வேலு தப்பித்தாரா...? உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா...? ஜோதியின் மீதான வேலுவின் காதல் என்னாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல எண்ணிலடங்கா வினாக்களுக்கு விடையளிக்கிறது வழக்கு எண் 18/9 படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்பான மீதிக்கதை!
வேலுவாக புதுமுகம் ஸ்ரீ, ரோட்டோர தள்ளுவண்டி டிபன் கடை வேலையாளாகாவே வாழ்ந்திருக்கிறார். அவரை மாதிரியே ஜோதியாக வரும் வீட்டு வேலைப்பெண்ணாக சட்டை, பாவாடையில் கையில் தூக்குவாளி கூடையுடன் வரும் ஊர்மிளாவும் காரமிளையாக கலக்கி எடுத்திருக்கிறார். இவர்களை மாதிரியே தினேஷாக வரும் மிதுன் முரளி, ஆர்த்தியாக வரும் மனிஷா யாதவ் உள்ளிட்ட புதுமுகங்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். பலே! பலே!
மேற்படி இந்த ஜோடிகளைக் காட்டிலும் ஒருபடி மேலாக ஸ்ரீயின் அப்பா-அம்மாவாக ஒரு சில காட்சிகளே வரும் வேடியப்பன் எனும் செந்தில், ராணி, தினேஷ் எனும் மிதுனின் தாயாக மினிஸ்டரின் கீப்பாக வரும் ராதிகா, ஆர்த்தி எனும் மனிஷாவின் தாய் தந்தையாக வரும் கவுதம், வித்யா-ஈஸ்வர், ஊர்மிளா எனும் ஜோதியின் தாயாக வரும் பார்வதி, ஸ்ரீக்கு வேலை வாங்கி தரும் "ஒரு மாதிரி" தோழியாக தேவி எனும் ரோஸி உள்ளிட்ட துணை, இணை நடிகர்கள் கூட பிரமாதம் போங்கள்... எனும் அளவு நடித்திருப்பது படத்தின் பெரியபலம்! இவர்கள் எல்லோரையும் தூக்கி சாப்பிடும் விதமாக இன்ஸ்பெக்டர் குமாரவேலாக நல்லவர் மாதிரி வாயாலேயே "வடை சுடும்" புதுமுகம் முத்துராமனும், ஸ்ரீயின் ரோட்டுகடை உதவியாளனாக காமெடி பண்ணும் சின்னசாமியும் சற்றே வறண்ட கதைக்களத்தை மறைத்து கலர்புல்லாக படத்தை பிரமாதமாக தூக்கி நிறுத்தி, வழக்கு எண் படத்திற்கு வெற்றி வாக்குளை சேர்க்கின்றனர். பேஷ்! பேஷ்!!
முதல்பாதி சற்று மெதுவாக நகர்வதும், படம்முழுக்க ஒருவித சோகம் பரவிக்கிடப்பதும் சற்றே டாக்குமெண்ட்ரி எபெக்ட்டை கொடுத்தாலும் அறிமுக இசையமைப்பாளர் பிரசன்னாவின் அழகிய பின்னணி இசையும், அசத்தலான பாடல்களும், எஸ்.டி.விஜய் மில்டனின் வித்தியாசமான புதுவித ஒளிப்பதிவும், இயக்குநர் பாலாஜி சக்திவேலின் கருத்தாழமிக்க எழுத்தும்-இயக்கமும் மைனஸ் பாயண்டுகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு பிளஸ் பாயிண்டுகளை நோக்கியே படத்தை இழுத்து சென்றிருப்பது, வழக்கு எண்ணை நம் வாழ்க்கையாக பிரதிபலிக்க செய்திருக்கிறது.
ஆக மொத்தத்தில் "வழக்கு எண் 18/9" , வாழ்க்கையை பிரதிபலிக்கும் தமிழ் திரைப்படங்களில் என்றென்றும் வாழும் "நம்பர்-ஒன்!"
தினமலர் விமர்சனம் » வழக்கு எண் 18/9
தினமலர் விமர்சனம்:
வசதியானவர்களின் காம காதல் ஒன்றால், வசதியற்ற ஒரு ஜோடியின் கண்ணிய காதலுக்கு ஏற்படும் இடையூறுகளும், இன்னல்களும் தான் "வழக்கு எண் 18/9" படத்தின் கரு, கதை, களம் எல்லாம்! "காதல்" படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலின் மற்றுமொரு காதல் படைப்பு மட்டுமல்ல... காதல் - காவல் காவிய படைப்பும் கூட!
கதைப்படி, ரோட்டோர டிபன் கடையில் வேலை பார்க்கும் அநாதை வேலுவுக்கு, அவன் கடையை ஒட்டி இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்க்கும் ஜோதி மீது காதல். ஆனால் இந்த காதல் கசிந்துருவதற்குள், வேறு சில காரணங்களால் வேலு மீது தப்பான அபிப்ராயம் கொண்டு வெறுப்பை உமிழ்கிறார் ஜோதி! இந்நிலையில் ஜோதி வீட்டு வேலை செய்யும் வசதியான வீட்டுப்பெண் ஆர்த்தி மீது அதே ப்ளாட்டில் வசிக்கும் அர்த்தியை விட வசதியான தினேஷூக்கு காதல் போர்வையில் காமம்! அந்த காமமும், காதலும் ஆர்த்தியை, ஆபாசமாக தனது செல்போனில் படமெடுத்து அதை நண்பர்களின் போனில் உலவ செய்து, பெருமை பட வேண்டும் எனும் நோக்கத்தில் தான் தினேஷூக்கு ஏற்படுகிறது. இது தெரியாமல் தினேஷின் வலையில் விழும் ஆர்த்தி ஒரு கட்டத்தில் சுதாரித்துக் கொண்டு தினேஷை விட்டு விலக, தன் நோக்கம் நிறைவேறாத வருத்தத்தில் தினேஷ், ஆர்த்திக்கு அடிக்கும் ஆசிட், குறிதவறி ஜோதியின் முகத்தையும், முக்கால்வாசி உடம்பையும் பதம்பார்க்கிறது.

Wednesday, 27 June 2012
cinema.vikatan - தமிழ் சினிமா குறித்து பெருமிதம்கொள்ள ஒரு படம்.
தமிழ் சினிமா குறித்து பெருமிதம்கொள்ள ஒரு படம்.
வழக்கு எண் 18/9
தமிழ் சினிமா குறித்து பெருமிதம்கொள்ள ஒரு படம்... இந்த 'வழக்கு’!
எளிய மனிதர்களின் பிரியங்களை அதிகாரமும் வக்கிரமும் எப்படிக் குதறிப் போடுகின்றன என்பதை அத்தனை அசலாக ஆகச் சிறந்த செய்நேர்த்தியுடன் நேர்மையாகச் சொல்லிய விதத்தில்... பாலாஜி சக்திவேல், தமிழ்த் திரை உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவராகத் தடம் பதிக்கிறார்!
முழுக்க முழுக்க அறிமுகங்கள்... புதுமுகங்கள்... அதுதான் படத்தின் நம்பகத்தன்மைக்கான நங்கூரம்.
ஒரு அபார்ட்மென்டில் வீட்டு வேலை செய்யும் ஊர்மிளா முகத்தில் யாரோ ஆசிட் அடித்துவிடுகிற வழக்கின் விசாரணையில் தொடங்குகிறது கதை. போலீஸ் விசாரணையில் ஊர்மிளாவோடு தகராறு பண்ணும் பிளாட்ஃபார இட்லிக் கடைப் பையன் ஸ்ரீ சிக்குகிறான். ஊர்மிளாவை ஒருதலையாகக் காதலித்த ஸ்ரீ மீது சந்தேகம் பாயும்போதே, உண்மையான குற்றவாளி, அதே அபார்ட்மென் டைச் சேர்ந்த பணக்கார பையன் மிதுன் முரளிதான் என்பது இன்ஸ்பெக்டருக்குத் தெரியவருகிறது. மிதுன் முரளியின் அம்மா, மந்திரிக்கு வேண்டப்பட்டவர் என்பதால் பணமும் அதிகாரமும் விளையாடுகின்றன. கடைசியில் இன்ஸ்பெக்டரின் நயவஞ்சகத் தால் ஸ்ரீ குற்றவாளியாக்கப்படுகிறான். இதற்குப் பதிலடியாக ஊர்மிளா என்ன செய்தாள் என்பது உலுக்கி எடுக்கும் க்ளைமாக்ஸ்!

மிக மிக எளிமையான ட்ரீட்மென்ட். ஆனால், அவ்வளவு வலிமையான உணர்வுகள். மொபைல் போன், இணையம் போன்ற அறிவியல் வளர்ச்சியைத் தவறாகப் பயன்படுத்தும்போது பள்ளி மாணவர்கள் வரை எவ்வளவு சீரழிவு வரும் என்பதையும் சொல்லும் இந்தப் படம்... நமக்குப் பாடம். பிடிக்காத பெண்ணின் முகத்தில் ஆசிட் அடிக்கும் மோசமான கலாசாரத்தைப் பற்றிய கதையில், கந்துவட்டிக் கொடுமை, கொத்தடிமைக் கொடூரம், எளிய மக்களின் அன்பு, பணக்கார சூது, பள்ளி மாணவி களின் பருவ ஈர்ப்புபோன்ற பல விஷயங்களுடன் உண்மைக்கு நெருக்கமாக ஊர்வலம் வருவதில், இயக்குநரின் கடும் உழைப்பு தெரிகிறது.
ஒருவன் பசியால் நடைபாதையில் மயங்கிக்கிடக்கும்போது டிஃபன் பாக்ஸோடு கடந்தோடும் கால்கள், அந்த ஜெயலட்சுமி போன் பேசும்போது பின்னால் சிரிக்கும் நித்யானந்தா போட்டோ, ஊர்மிளாவின் கம்யூனிஸ அப்பாவின் பெயர் பாலன், ப்ளாட் போட விவசாய நிலங்கள் எனப் படம் முழுக்க எவ்வளவு நுணுக்கங்கள்!
இட்லிக் கடைப் பையனாக வரும் ஸ்ரீ அப்பாவி பையன் கேரக்டருக்கு அப்படியே பொருத்தம். அத்தனை வருடங்கள் கொத்தடிமையாக இருந்த போதெல்லாம் கோபம் காட்டாமல், பெற்றோர் இறந்த தகவலை மறைத்தது தெரிந்து கொந்தளித்து எழுவது, ரோஸி அக்காவிடம் பரிதாபம்கொள்வது, ஊர்மிளாவைப் பார்க்கும்போதெல்லாம் முகத்தில் வெட்கப் பிரகாசம் காட்டுவது என ஸ்ரீ ஆச்சர்ய அறிமுகம். இன்ஸ்பெக் டர் வஞ்சகமாகப் பேச, குழப்பமும்காதலு மாக அழுது அரற்றிச் சம்மதிக்கும் அந்தக் காட்சி... மாஸ்டர் பீஸ்!
முழுதாக இரண்டு வரி வசனம்கூட இல்லாமல் 'கண்கள் இரண்டால்’ மட்டுமே படம் முழுக்க பேசுகிறார் ஊர்மிளா மஹந்தா. அதுவும் க்ளைமாக்ஸில் ஸ்ரீயைப் பார்க்கும் அந்த ஒற்றைப் பார்வையிலேயே... காதல், கருணை, ஏக்கம் என அனைத்தையும் பிரதிபலிப்பதில் வெல்டன் ஊர்மிளா!
யாரப்பா அந்த இன்ஸ்பெக்டர் முத்துராமன்? குள்ளநரி போலீஸ் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு அழகாக உயிர் கொடுத் திருக்கிறார். 'அந்த முறுக்கு கம்பெனிக்காரன் மேல கொதிக்கிற எண்ணெயை நீ ஊத்தியிருக்கணும்டா...’ என்று ஸ்ரீக்கு ஆதரவாகப் பேசுவதும், 'நீங்க இனிமே எதுன்னாலும் என்கிட்டயே ஸ்ட்ரைட்டா வந்திருங்க...’ என அயோக்கிய முகம் காட்டுவதுமாக... எந்த உணர்ச்சியும் காட்டாமல் காவாளித்தனம் செய்யும் ஒரு காவல் அதிகாரியின் மனப்போக்கை கச்சிதமாகப் பிரதிபலித்து இருக்கிறார்.

படம் நெடுக நடமாடும் சீரியஸ் மாந்தர்களுக்கு நடுவில் 'யோவ்... யோவ்...’ என்றபடி வரும் சின்னசாமி, பெரிதாகக் கவர்கிறான். கிராமத்துக் கூத்தில் சிறுமியாக வேடமிட்டுப் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று 'மார்பில்’ நோட்டுக் குத்திக்கொள்வதாகட்டும், படம் முழுக்கவே பெண்ணின் மெல்லிய உடல்மொழியுடன், அலட்டல் பந்தாவுடன் வலம் வருவதாகட்டும்... யோவ்... உனக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்குய்யா!
தன்னிடம் 'ஃப்ளெர்ட்’ செய்கிறான் என்று தெரிந்தே தயக்கத்துடன் அதை அனுமதிப்பதிலும், மிதுனின் மொபைலில் வீடியோ பார்த்து அதிர்ந்தாலும் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவன் காரிலேயே 'காய்ச்சல் காரணம்’ சொல்லி வீட்டுக்குப் பத்திரமாக வந்து இறங்கும் துணிச்சலிலும், மனீஷா யாதவின் உடல்மொழி மெட்ரோ கான் வென்ட் மாணவியைக் கண்ணில் நிறுத்துகிறது!
காஃபி டே அவுட்டிங், பார்ட்டி டேட்டிங் கலாசாரத்தில் திளைக்கும் அலட்சியமான, வக்கிரமான பணக்கார வீட்டுப் பையனாக மிதுன் முரளி கடுப்பேற்றுவதில்... கச்சிதம்!
'பொறுக்கி... பொறுக்கி’ என ராகம் போட்டுக்கொண்டே இருக்கும் பார்வதி, ரோஸி அக்காவாக வரும் தேவி, வண்டிக் கடைக்க£ரராக வரும் ஜெயபாலு என அத்தனை பேரும் இயல்பான அழகான தேர்வுகள். படம் முழுக்க படு இயல்பான வசீகரமான வசனங்கள் பெரிய பலம். 'அய்யே அந்த தியேட்டர் வேணாம்க்கா... ஒரே கலீஜ்!’ என்று 'தொழில் நிலவரம்’ பேசும் பாலியல் தொழிலாளிகள், 'கருவாடு இருக்குற இடத்துலதான்யா பூனை இருக்கும்’ என்று போலீஸை வைத்தே கஞ்சா விற்பவனை அடையாளம் காண்பது என்பதெல்லாம் சாம்பிள்கள்! கவர்ச்சியின் எல்லையைத் தொட அனுமதிக்கும் கதையிலும் கவனமாக விலகி நடந்திருப்பது, வசதியான வீட்டுப் பெண் என்பதால் 'கெட்ட பெண்’ணாகக் காட்டாமல் வயதுக்கு உரிய இயல்போடு மனீஷா பாத்திரத்தை வடிவமைத்திருப்பது, 'இனிமே குடிக் காதக்கா. உனக்கு நான் இருக்கேன்க்கா...’ என்று பாசத்துடன் ஸ்ரீ காசு கொடுத்ததும் நெகிழும் ரோஸி பிளாஸ்டிக் கப்பை மிதித்துவிட்டுச் செல்வது, ஊர்மிளாவை கோர்ட் வளாகத்தில் போலீஸார் அடிக்கத் தொடங்க, பெண் வக்கீல்கள் ஓடிவந்து அவளைச் சூழ்ந்து நின்று காப்பாற்றுவது எனப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் பொதுமக்களின் மீதான அக்கறை தொனிப்பதற்கே... இன்னொரு சபாஷ்!
புகைப்படம் எடுக்கும் கேனான் 5டி டிஜிட்டல் கேமரா ஒளிப்பதிவில், பக்கத்து வீட்டில் நடப்பதை வேடிக்கை பார்ப்பதைப் போல நெருக்க உணர்வை அள்ளித் தருகிறது விஜய் மில்டனின் கேமரா. கதை மெதுவாக நகரும் நேரங்களில் எல்லாம் விதவிதமான கேன்டிட் ஷாட்கள்தான் படத்தை தூக்கிப் போகின்றன. ஆனால், நடிகர்களின் உடம்போடு கேமராவை இணைக்கும் 'பாடிகேம்’ ஷாட்களில் மட்டும் அங்கங்கே கார்ட்டூன் எஃபெக்ட்!
பாடல்களே இல்லாத இப்படியான ஒரு படத்தில் பின்னணி இசை எவ்வளவு முன்னணி வகித்திருக்க வேண்டும்... அது மிஸ்ஸிங். இசையே இல்லாமல் ஒலிக்கும் 'வானத்தையே எட்டிப் பிடிப்பேன்..’, 'ஒரு குரல் கேட்குது பெண்ணே..’ கவிதைகள் நல்ல ஆறுதல்.
தவறான மனிதர்களின் மீதான பெருங்கோபத்தையும் எளிய இதயங்களின் மேல் பேரன்பையும் கிளறிவிட்டு மனிதத்தைப் பேசும் இந்த வழக்கை, எந்த வாய்தாவும் வாங்காமல் ஆதரிக்க வேண்டியது சினிமா ரசிகர்களின் கடமை... தவறவிடக் கூடாத உரிமையும்கூட!
Behindwoods -FILE SHOULD NOT BE CLOSED
http://www.behindwoods.com/features/visitors-1/jun-12-01/vazhakku-enn-189-balaji-sakthivel-01-06-12.html
VAZHAKKU ENN 18/9 - FILE SHOULD NOT BE CLOSED | |||
Home > Visitor Column | |||
By Behindwoods Visitor Kaleel Ibrahim | |||
Behindwoods.com isn't responsible for the views expressed by the visitor in this column. | |||
|
TIMES OF INDIA - Vazhakku Enn 18/9 will be the film of the year
THE TIMES OF INDIA
http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/movie-reviews/Vazhakku-Enn-18/9/movie-review/12995387.cms
The Times of India, they gave it 4.5 out of 5, the highest rating ever for a Tamil film.

Critic's Rating:
Cast: Sri, Urmila Mahanta, Mithun Murali, Manisha Yadav, Muthuraman
Direction: Balaji Sakthivel
Genre: Drama
Duration: 2 hours
Listen to the album on gaana
The Times of India, they gave it 4.5 out of 5, the highest rating ever for a Tamil film.
Tami
M Suganth, TNN, May 4, 2012, 04.54PM IST
Story : Velu (Sri), a
worker at a street-side food shop, falls in love with Jothi (Urmila), who works
as a maid at Arthi's (Manisha) house. Meanwhile, Dinesh (Mithun), the
school-going son of a minister's concubine, is trying hard to charm Arthi. What
happens when Arthi comes to know of his ulterior motive, and how does this
affect the lives of Velu and Jothi?
Movie Review: After a mediocre debut with Samurai, Balaji Sakthivel bowled us over with the trendsetting Kadhal. The subsequent Kalloori was largely an over indulgent exercise but now, Balaji Sakthivel has bounced back and how!
Thematically, Vazhakku Enn 18/9 begs comparison with this year's Oscar-winning Iranian film, A Separation, which managed to be a relationship drama, a whodunit, a social commentary all rolled into one. As in that film, here too, it is a maid who is victimized, but the comparison ends there. Unlike the acclaimed Iranian film, in which the morality of the characters remained ambiguous, here, we are provided with a set of characters whose motivations are very clear, save for one - inspector Kumaravel (Muthuraman), who keeps you guessing about his intentions as he handles the case.
The film begins with this character trying to interrogate the victim (Jothi) and later, unfolds through his interrogations of the prime suspect, Velu, and the voluntary witness, Arthi. Throughout, Kumaravel remains a willing listener, always amiable, making the two confide in him without much prodding. Muthuraman plays this part with such nimbleness, leading us to believe in his quest to find the truth. That is why, when the character turns devious, you are not only shell-shocked but repelled by the trick he has played on his unsuspecting victims.
Call it nitpicking, but Balaji could have very well done away with the back story of how Velu ended up in Chennai. These scenes appear early in the movie, and while they serve to make us empathise with his character, they also make you dread that we are in for yet another Angaadi Theru. Thankfully, the director shifts the focus from Velu to his romance, which might, on paper, appear to follow the recent trend of a ragamuffin and his attempts at wooing his girl (who, in fact, thinks of him as a scum) but, as he did with Kadhal (which could have been summed up as just another rich girl-poor boy romance), the director presents this in a manner that feels very real and refreshing. He is deft while handling the other track between Arthi and Midhun as well, bringing to the fore the vacuous nature of their relationship.
And, the director is also able to extract wonderful performances from his entire cast. While Sri, as the good-hearted but misunderstood Velu, and Mithun, as the lecherous Dinesh, are totally convincing, it is Urmila Mahanta's understated performance as Jothi that is the film's pivot. Until the climax, you mostly glimpse the character in the background or along with the other characters, and she rarely speaks, but Urmila, with her low key approach, makes sure that you take notice of Jothi every time she is in the frame.
With Kadhal, Balaji seemed to have found his style, which you could call cinema verite and you wouldn't be wrong. He seems to relish in making his films look and feel as real as possible and here, his technical team is up to his challenge. Cinematographer Vijay Milton often takes a fly on the wall approach and that only makes the film very direct. And despite shooting with a digital camera, he nearly manages to replicate the luster of film using natural light to dazzling effect. The suitably effective score, by guitarist Prasanna (who makes his feature film debut as a composer), is punctuated by two heartrending songs which do not feature any instrument in the background but brilliantly underscore the poignant moments of the film. We still have a long way to go before the year ends, but you can confidently bet that Vazhakku Enn 18/9 will be the film of the year. It is a bravura piece of filmmaking that will leave you stunned - and even invigorated - by the time it ends.

உலகத்தரத்தில் ஒரு சினிமா! - வழக்கு எண் 18/9 - Nakeeran

’அவன் தலை விதி.. அப்படி இருக்கான்.. நல்ல காலம்.. அப்படி ஒரு மோசமான நெலமையில நாம இல்ல..’ அழுக்கு மனிதர்களைப் பார்க்கும் போதெல்லாம் உச்சாணிக் கொம்பில் நின்று ‘உச்’ கொட்டிவிட்டு, மனிதநேயர்களாக தங்களை பாவித்துக் கொள்பவர்கள் உண்டு. இந்த விளிம்பு மனிதர்களைப் பார்ப்பதே அருவருப்பானது என்று முகம் சுளிப்பவர்களும் உண்டு.
‘நீ யாராகவும் இருந்துவிட்டுப் போ.. உங்களில் பலரும் வெறுக்கின்ற அந்த அழுக்கு மேடையில்தான் வழக்கு எண் 18/9-ன் கதாபாத்திரங்களை உருளவிட்டிருக்கிறேன்..’ என்று படு யதார்த்தமாக உலகத்தரத்தில் ஒரு சினிமாவைத் தந்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
கறை படிந்த பற்களும் பரட்டைத் தலையுமாய் ட்ரை சைக்கிள் ஓட்டுகிறான் கதாநாயகன் (ஸ்ரீ). ஆம்பள சட்டைய போட்டுக்கிட்டு, வேலைக்காரி பெத்த வேலைக்காரியாக வீட்டைப் பெருக்குவதும், துடைப்பதும், துணி துவைப்பதும், காயப் போடுவதுமாகவே இருக்கிறாள் கதாநாயகி (ஊர்மிளா மஹந்தா). கதாநாயகியை
நன்றாக வேலை(வீட்டு வேலைக்காரி) வாங்கியிருக்கிறார் இயக்குனர் என்பார்களே, இந்தப் படத்துக்கு அது சாலப் பொருந்தும். ஒரு பிளாட்பார தள்ளு வண்டி சாப்பாட்டுக் கடையைச் சுற்றியே பயணிக்கின்ற கதையில் ஒரு திருப்பமாக மேட்டுக்குடி மக்கள் தலை காட்டும் போது ‘அட, வழக்கமான சினிமா மாதிரி தெரியுதே..’ என்ற எண்ணம் எட்டிப் பார்க்கிறது. ஆனாலும், இரண்டுவிதமான உலகத்தையும் வெகு லாவகமாக இணைக்கிறது வலுவான திரைக்கதை.
கதை இதுதான் – பெற்றோர் பட்ட கடனுக்காக சிறு வயதில் வடநாட்டு முறுக்கு கம்பெனியில் வதைபடும் கதாநாயகன், ஒரு கட்டத்தில் அந்தப் பெற்றோரையும் இழந்து விட்டு, சென்னைப் பட்டண வீதியில் விழுந்து கிடக்கிறான். பாலியல் தொழிலாளி என்றாலும் ரோஸி மட்டுமே அவனுக்காக மனம் கசிகிறாள். பிளாட்பாரக் கடையில் கிடைத்த வேலையே அவனுக்கு பெரிதாகப் படுகிறது.
பிழைப்புக்காக பட்டணம் வந்த சிறுவன் (சின்னச்சாமி) கிராமத்தில் தான் கற்றறிந்த கூத்துக்கலையை கதாநாயகன் முன் அபாரமாக வெளிப்படுத்துகிறான். அச்சிறுவனின் தோழமை அவனுக்கு நம்பிக்கையூட்டுகிறது. சாலையில் அடிக்கடி தன்னைக் கடந்து போகும் கதாநாயகியின் கன்னக் குழி முகத்தைப் பார்க்கும் போதெல்லாம் அதுவரை கண்டிராத காதல் பரவசத்தில் திளைக்கிறான்.
ஒரு தலையாய் இவன் காதல் பயணிக்க... ப்ளஸ் டூ படிக்கின்ற இன்னொரு ஹீரோ-கம்-வில்லன் (மிதுன் முரளி) என்ட்ரி ஆகிறான். வக்கிரத்தோடு சக மாணவி (மனிஷா யாதவ்) பின்னால் அலைகிறான். எதை எதையோ பார்த்து தொலைக்கிறான். தறிகெட்ட அவனது இளமை வெறிதான் ஒரு கொடூரத்தை நிகழ்த்திவிட்டு, வழக்கு எண் 18/9 ஆக பதிவாகிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து ஒரு உன்னத மனுஷியின் தீர்ப்புமாக கதை நிறைவடைகிறது.
“நான் குணமாகணும்னு நீ ஜெயிலுக்குப் போறது உன்னோட காதல்ன்னா.. நான் ஜெயிலுக்குப் போயி உனக்கு விடுதலை கிடைக்கச் செய்யறதுதான் என்னோட காதல்..” என்று காதலுக்காக தங்களை வருத்திக் கொள்கிறார்கள் நாயகனும் நாயகியும். புதுமுகங்களை அந்தந்த காதாபாத்திரங்களாகவே வாழ வைத்திருக்கிறார் இயக்குனர்.
அதுவும் அந்த இன்ஸ்பெக்டர் ரோலை அத்தனை பாந்தமாக செய்திருக்கிறார் முத்துராமன். கோர்ட் வளாகத்தில் கதாநாயகி முத்துராமன் முகத்தில் ஆசிட் அடிக்கும் போது எழுகின்ற கரவொலி அந்தக் காட்சிக்கானது என்றாலும், முத்துராமனின் தேர்ந்த நடிப்புக்காக
விழுந்த கைதட்டலாகவே கருதிக் கொள்ளலாம். தெருமுனையில் நின்று கேட்பது போல வசனம் அத்தனை இயல்பாக இருக்கிறது. ஸ்டில் கேமராவில் எடுத்த படமாம். ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனை பாராட்டாமல் இருக்க முடியாது.
பள்ளி மாணவி ரோலில் வரும் மனிஷா அந்த பாத்திரத்துக்கு அத்தனை பொருந்தியிருக்கிறார். படம் நெடுகிலும் காட்சிகளில் வறட்சியை மட்டுமே கண்டு வறண்டு போய் இருக்கும் ஆடியன்ஸுக்கு பாலைவனச் சோலையாகத் தெரிகிறாள். ‘வேலு (ஸ்ரீ) பாவம்மா.. நீயாச்சும் (ஊர்மிளா) அவனைக் காதலிச்சு அவன் வாழ்க்கையில சந்தோஷத்த ஏற்படுத்தணும்..’ என்று மனசுக்குள் ஆடியன்ஸே ரெகமண்ட் பண்ணுகிற அளவுக்கு ஹீரோ அத்தனை துன்பத்தையும் அனுபவிக்கிறான்.
37 வருடங்களுக்கு முன் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதையில் மகளின் காதலனுடன் சல்லாபித்து தன்னையே மாய்த்துக் கொள்ளும் படாபட் ஜெயலட்சுமியின் அம்மா கேரக்டரில் நடித்தவரின் முகச்சாயல் அப்படியே இருக்கிறது ஹீரோயின் ஊர்மிளாவுக்கு. ஆசிட் வீச்சில் வெந்து கருகிய ஜோதியின் (ஊர்மிளா) முகத்தை கடைசி வரை காட்டாமலே இருந்திருக்கலாம். கொடூரத்தைக் காட்டி க்ளைமாக்ஸில் பதற வைக்க வேண்டும் என்றோ, நாயகனின் காதல் தீவிரம் வெளிப்பட வேண்டும் என்றோ, ஏதோ ஒருவிதத்தில் காம்ப்ரமைஸ் செய்து கொண்டு க்ளோஸ்-அப்பில் அந்த முகத்தைக் காட்டுகிறார் டைரக்டர். இது போன்ற குறைகளும் உண்டு.
சுடுகின்ற நிஜம் என்பதாலோ என்னவோ, பாலியல் உணர்வு தலை விரித்து ஆடுகின்ற மனிஷா - மிதுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் பார்வையாளர்களையும் சுட்டுப் பொசுக்கி நெளிய வைக்கிறது. அதைத் தாங்கிக் கொள்ள முடியாத ரசிகர் ஒருவர் “டேய்.. இனிமே எம்புள்ளய தனியா ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டேன்டா..” என்று பாமரத்தனமாக கத்தியபோது தியேட்டரே அலறியது.
படம் பார்க்கின்ற ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒரு சீன் இப்படி ஒரு தாக்கத்தை உண்டுபண்ணி விடுகிறது. ‘எங்க வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்கு.. ஆமா.. எங்க வீட்டுலயும் ஒரு பையன் இருக்கான்.. அய்யோ.. இவங்களயெல்லாம் நாம கவனிக்கிறதேயில்லையே..’ என்னும் பதற்றத்தை ஏற்படுத்தி விடுகின்றன படு இயல்பாக செதுக்கப்பட்டிருக்கும் மனிஷா – மிதுன் கதாபாத்திரங்கள்.
காட்சி முடிந்து வெளியேறும் போது “ஒரே பாட்ட திருப்பித் திருப்பிப் போட்டு படத்த முடிச்சிட்டான்டா..” என்று சராசரி ரசிகன் கமெண்ட் அடித்தாலும், ’ஒரு குரல் கேட்குது பெண்ணே..” என்ற பாடல் நெஞ்சில் பதிந்து விடுகிறது. காட்சிக்கு ஏற்ப பிசிறில்லாமல் ஒலிக்கிறது பிரசன்னாவின் பின்னணி இசை.
நெஞ்சு கனத்து, தொண்டை வறண்டு, குமுறி அழுதால் மன பாரம் கொஞ்சம் குறையுமே என்ற நிலை வரும் போதெல்லாம் - ஒரு சினிமாவைப் பார்த்து கோழை போல் அழுவதா என்று அடக்கிக் கொள்பவர்களை - அவர்களையும் அறியாமல் குபுக்கென்று கண்ணீரைக் கொப்பளிக்க வைக்கின்ற உயிரோட்டமான காட்சிகள் படத்தில் உண்டு.
ஒரு படைப்பாளிக்கு ரசிகர்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகளைக் காட்டிலும் சிறந்த காணிக்கை எதுவாக இருக்க முடியும்? தமிழில் இப்படி ஒரு அபூர்வ சினிமாவைத் தந்து, தரமான ரசிகர்களின் மனதில் நங்கூரம் பாய்ச்சி நிற்கிறார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
நல்ல சினிமா.. மிக நல்ல சினிமா.. சூப்பர் டூப்பர் மூவி.. என்றெல்லாம் எத்தனையோ படங்களை தமிழ் ரசிகர்கள் கொண்டாடியிருக்கிறார்கள். இந்தப் படத்தை அந்த வரிசையிலெல்லாம் சேர்த்து விட முடியாது. ஆம்.. வழக்கு எண் 18/9 அதற்கெல்லாம் மேல்.
-சி.என்.இராமகிருஷ்ணன்

Vazhakku Enn: 18/9 — Hail the verdict!
May 5, 2012
Vazhakku Enn: 18/9 — Hail the verdict!
MALATHI
RANGARAJAN
poignant message Vazhakku Enn 18/ 9
Taking up vital issues that we see, hear
or experience in day to day life and treating them as authentically as possible
are writer-director Balaji Sakthivel's forte. The acumen of the ace story
teller comes to the fore yet again inVazhakku Enn: 18/9 (U/A), his fourth. A neat presentation
with an all new-cast could have been a tough proposition. But Sakthivel
achieves it with élan. And as a maker who doesn't go in for pomp and
extravagance, despite having trained under Shankar, the king of grandeur,
Sakthivel should be a producer's delight. Live locations and the veracity of
the characters are alluring aspects ofVazhakku Enn … The natural lighting and muted colour
tones (Vijay Milton's expertise draws attention here) suit the mood of the
story perfectly. But the slight jerks in camera movement are a strain on the
eyes.
Juxtaposing the struggle of a
poverty-stricken, vulnerable teenager with that of an arrogant, affluent school
goer and very intelligently penning a story where the lives of these two
totally unconnected people get intertwined, Sakthivel proves his screenplay
skills. If Vazhakku Enn: 18/9 opens with the climax and manages to
keep you hooked to the happenings till the end, it is because of the effective
narration.
Life, which has been very cruel to Velu
(Sri), a poor orphan, seems to appear slightly rosy, when he sees Jothi (Urmila
Mahanta). But the joy is short-lived as he is sent to prison for no fault of
his. When Kumaravel (Muthuraman), the police inspector, shows concern, the
gullible boy believes him. Little does he know that the man is a wolf in
sheep's clothing. Is Velu's life doomed beyond redemption? Or will Jothi come
to his help?
The fresh faces make you feel that you
are watching a real-life drama unfold. Sri, as the hapless Velu, has large eyes
that reveal the right amount of innocence. And equally telling is the quiet
demeanour of Urmila. Mithun Murali as the rich, spoilt brat, Dinesh, is
passable, while Manisha Yadav, another greenhorn, can improve. After Sri and
Urmila, it is the boy Chinnasamy, the friend of Velu, who makes a mark. Not to
forget the spontaneous portrayal of the loud, acid-tongued Anjalai (Jothi's
mother) played by Parvathy, and Muthuraman, the cunning policeman. Balaji
Sakthivel's in-depth study of today's wealthy adolescent, Chennai's street
life, and the mindset of slum dwellers for whom, the use of foul language is a
weapon to safeguard themselves, has helped him present a realistic showcase.
Sakthivel's diligence deserves an ovation.
Prasanna's unobtrusive RR and the sober
number that comes without any accompanying music add to the genuineness. A
dream run at the BO accompanied by encomiums from all quarters made Balaji
Sakthivel a notable director after Kaadhal.
Something his Samurai didn't and Kalloori couldn't achieve -- though they were
also films that deserved to win. Now againVazhakku Enn: 18/9 lives up to the standard Sakthivel set
for himself.
The points made are poignant, and the
messages are for both parents and youngsters alike. So go ahead!
Vazhakku Enn: 18/9
Genre: Cyber crime
Director: Balaji Sakthivel
Cast: Sri, Urmila Mahanta,
Mithun Murali, Manisha Yadav
Storyline: A poor, naïve and honest pair of
adolescents unwittingly pitted against a timid but well-to-do schoolgirl, and
her rich, perverted boyfriend
Bottomline: Another product
Sakthivel can be proud of
Subscribe to:
Posts (Atom)